சென்னை: தமிழ் சினிமா.. ஏன் இந்திய சினிமாவுக்கே அப்போதெல்லாம் ஒரு டெம்ப்ளேட் இருந்தது. பணக்காரர்கள் என்றால் கருணையற்றவர்கள், பாசம் இல்லாதவர்கள், ஏழைகளை கொடுமைப்படுத்துவதுதான் அவர்கள் வாழ்நாள் லட்சியம் என்பது போன்ற காட்சியமைப்பு எம்ஜியார் காலம் தொட்டு தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா “நம்ம நாட்டில் இருக்கிறதே, நாலைந்து பணக்காரங்கதான்.. அவர்களையும் ஒழிக்கனும்னு திட்டம்