வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: தன் வயோதிகம், உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார்.
கடந்த மாதம் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியானது. எனினும் சிகிச்சைக்கு பின் குணமடைந்து அரமண்னை திரும்பினார்.
இந்நிலையில் அரண்மனையில் ஒய்வில் இருக்கும் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உடல் சுகவீனமடைந்து வருவதாகவும், தனது மகன் ஹாரியை மன்னராக்கி முடிசூட்டுவது, அல்லது மன்னரின் அனைத்து நிர்வாக பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைத்து, அனைத்து அதிகாரங்களையும் ஹாரிக்கு அளிப்பது குறித்து குடும்ப நண்பர்கள், அரண்மனை அரசியல் நிபுணர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement