மார்ச் 5ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய பிஓய்டி ஆட்டோ நிறுவனத்தின் சீல் எலக்ட்ரிக் செடான் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2024 ஸ்பான்சராக உள்ளது.
UEFA EURO 2024 அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் மற்றும் அதிகாரப்பூர்வ எலகட்ரிக் மொபிலிட்டி பார்ட்னராக உள்ள BYD ஆனது வாடிக்கையாளர்களுக்கு UEFA போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் BYD நிறுவன சீல் காருக்கு முன்பதிவு செய்பவர்கள் பிரத்யேக திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். BYD இந்தியா கூறுகையில், UEFA போட்டியை காண டிக்கெட் மற்றும் இந்தியாவிலிருந்து போட்டிக்கான சுற்று பயண விமான டிக்கெட்டை பெற குறைந்த எண்ணிக்கையிலான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீல் 82.5kWh வேரியண்ட் முக்கிய விபரம்;
- இரு அச்சிலும் தலா ஒரு மோட்டாரை பெற்று 530hp மற்றும் 670Nm டார்க் உற்பத்தி செய்கின்றது.
- 0-100kmph வேகத்தை எட்ட 3.8 வினாடிகளை ஆல் வீல் டிரைவ் மாடல் கொண்டுள்ளது.
- முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 700 கிமீ (CLTC)
- Seal காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.
- 150kW விரைவு சார்ஜரை ஆதரிக்கின்ற ‘Blade Battery’ டெக்னாலஜி பெறுகின்றது.
The post BYD சீல் எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவக்கம் appeared first on Automobile Tamilan.