வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சட்ட விரோத குவாரி வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் 2012 -17 ம் ஆண்டு காலகட்டத்தில் உ.பி., முதல்வராக பதவி வகித்தார். அதில் 2012- 13 ம் ஆண்டில் மட்டும் குவாரி துறையை தன்னிடம் வைத்து இருந்தார். அப்போது, குவாரி அமைப்பதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அதில், ‛‛அதிகாரிகள், மின்னணு முறையில் ஏலம் விடுவதில் மோசடி நடந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை மீறி குவாரியை புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு வளங்களை கொள்ளையடிக்க அனுமதி வழங்கினர்” என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, 2019ல் விசாரணையைத் துவக்கிய சி.பி.ஐ., அதிகாரிகள், அகிலேஷ் யாதவ் குவாரித்துறைவை கைவசம் வைத்து இருந்த காலகட்டத்தில், முதல்வர் அலுவலகம் ஒரே நாளில் 13 ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டியது.
ஹமீர்பூர் கலெக்டராக இருந்த சந்திரகலா மின்னணு டெண்டர் முறையில், சுரங்க ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தை மீறி ஒதுக்கீடு வழங்கியதாகவும் சி.பி.ஐ., கூறியது. இது தொடர்பாக, பல இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2019ல் சந்திரகலா, சமாஜ்வாதி எம்.எல்.சி., ரமேஷ்குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், அகிலேஷ் யாதவ் நாளை (பிப்.,29) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது. சிஆர்பிசி 160வது பிரிவின்படி இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement