வாஷிங்டன்: மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் அமெரிக்காவின் நியூஜெர்சியில், தங்க நகைத் தொழிலில் ஈடுபட்டு வரும், இந்திய அமெரிக்கர் மோனிஷ்குமார் கிரண்குமார் தோஷி ஷா, 39, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இவர் இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து நகைகளை, அமெரிக்காவுக்கு வரவழைத்தார். நேரடியாக வரவழைத்தால், அதற்காக சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடும். இதை தவிர்ப்பதற்காக, அவர் பல மோசடிகளில் ஈடுபட்டார்.
இதன்படி, கிழக்காசிய நாடான தென்கொரியாவில் ஓர் அலுவலகம் திறந்து, அங்கு அனுப்ப வைத்து, அங்கிருந்து அமெரிக்காவுக்கு அவற்றை ஏற்றுமதி செய்தார்.
இதன் வாயிலாக சுங்க வரி சலுகையை பெற்று வந்தார்.
மேலும், பல போலி பெயர்களில் அமெரிக்காவில் நிறுவனங்களைத் துவக்கி, அதிலும் வரி மோசடிகள் செய்தார்.
இவ்வாறு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement