புதுடில்லி:
ஒரு தேசம், ஒரு தேர்தல் தொடர்பாக ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில்
அத்தியாயமாக சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
பார்லி. லோக்சபா மற்றும் மாநில
சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல்
நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை
கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது.
ஒரு
தேசம், ஒருதேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை மத்திய அரச அமைத்துள்ளது.
இக்குழு பல முறை கூடி ஆலோசித்தது. மக்களின் கருத்தையும் கேட்டு வருகிறது.
இந்நிலையில்
ஒரு தேசம், ஒரு தேர்தல் தொடர்பாக கருத்தொற்றுமையை உருவாக்க
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே சட்டக்கமிஷன் ஆலோசனை
நடத்தியிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில
கட்சிகளின் கருத்தை கேட்டு சட்டகமிஷன் கடிதம் எழுதியது.
இதையடுத்து
2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமல்படுத்துவது தொடர்பாக
அரசியல் சாசனத்தை திருத்த வேண்டி, ஒய்வு பெற்ற நீதிபதியும் சட்டக்கமிஷன்
தலைவருமான ரித்துராஜ் அவஸ்தி ஒரு தேசம் ஒரு தேர்தல் ஷரத்துக்களை அரசியல்
சாசனத்தில் அத்தியாயமாக (பாகம்) சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement