மூணாறு:இடுக்கி மாவட்டம் பூப்பாறைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப் 40, என்பவருக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பூப்பாறையில் திருமணம் ஆன பெண்ணுடன் வசித்த அனுப் என்பவர் அப்பெண்ணின் 17 வயது மகளை 2018 நவம்பரில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனை வெளியில் கூறினால் தாய், மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
சாந்தாம்பாறை போலீசில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். போலீசார் அனுப்பை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரித்த நீதிபதி சிராஜூதீன், போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் அனுப்க்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அத்தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
தவறினால் மேலும் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஸ்மிசூ கே.தாஸ் ஆஜரானார்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement