சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை சந்தையில் ஆரம்பமாகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் F25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ‘F’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்.
சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7050 ப்ராஸசர்
- 64 + 8 + 2 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- 4K வீடியோ
- 5,000mAh பேட்டரி
- 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 5ஜி நெட்வொர்க்
- ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் அம்சத்தின் மூலம் எளிதில் பயனர்கள் போட்டோக்களை எடிட் செய்யலாம்
- 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.23,999
- 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.25,999
Transform every passing moment into a memory with the #OPPOF25Pro5GWith 64MP Triple Camera, 4K Video, IP65 water and dust resistance, 120Hz AMOLED screen, 5000mAh Battery, 67W Flash Charge, it truly is #BornToFlaunt pic.twitter.com/jLACYO75hZ
— OPPO India (@OPPOIndia) February 29, 2024