பெங்களூரு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கர்நாடா முதல்வரிடம் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பைப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான குழு நடத்தியது. தற்போது சித்தராமையா மீண்டும் ஆட்சியில் உள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை முற்றிலும் அறிவியல் பூர்வமானது […]