கலைஞர் எழுதுகோல் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கடந்த 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு:

தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டுக்காகப் பல ஆண்டுகள் பணியாற்றி பெற்ற நீண்ட அனுபவம், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டுகளையும் பாராட்டி, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வி.என்.சாமி பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முதிர்ந்த அனுபவம் கொண்டவர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த அவர் கடந்த 1931-ல் பிறந்தவர். 92 வயது நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராக இருந்த அவர், தமிழ்நாடு, சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றி கடந்த 1989-ல் ஓய்வு பெற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.