
தெகிடி இரண்டாம் பாகம் : அசோக் செல்வன் வெளியிட்ட தகவல்
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் தெகிடி. ஜனனி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தெகிடி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அதனால் தெகிடி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முதல்பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் தொடருவார்கள் என கூறப்படுகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.