மகாராஷ்டிராவில் முதல்வரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு வரும் மனுக்களை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க கையெழுத்து போட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். எம்.எல்.ஏ.க்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு கொடுப்பர். அதில் முதல்வர் கையெழுத்து போட்டு மேல் நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்திற்கு அனுப்புவது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடி வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். முதல்வரிடம் இருந்து வந்த சில கடிதங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் அது குறித்து முதல்வரிடம் விளக்கம் கேட்ட போது முதல்வர் அக்கடிதத்தில் கையெழுத்து போடவில்லை என்று தெரிய வந்தது.
முதல்வரின் கையெழுத்து மற்றும் சீல் வைத்து அந்த கடிதங்கள் வந்திருந்தன. 10க்கும் மேற்பட்ட கடிதங்கள் இது போன்று வந்திருந்தது. உடனே இது குறித்து கவலை தெரிவித்த முதல்வர் ஷிண்டே இது குறித்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் முதல்வர் அலுவலக அதிகாரிகள் மும்பை மெரைன் டிரைவ் போலீஸில் இது தொடர்பாக முறைப்படி புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,” முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வரும்.
அந்த மனுக்களை முதல்வர் ஆய்வு செய்து அதில் சில குறிப்புகளை எழுதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். போலி கையெழுத்து மூலம் வரும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருந்தால் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY