A victim of many complaints; Arrested after 55 days in West Bengal | பல புகார்களில் சிக்கியவர்: மேற்குவங்கத்தில் 55 நாட்களுக்குப்பின் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பெரும் சர்சசசைக்குள்ளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். நிலஅபகரிப்பு ,செக்ஸ்புகார், சட்டவிரோத பணபரிமாற்றம் என பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்து வருகிறது. பல போராட்டத்திற்கு பின்னர் 55 நாட்கள் கடந்து இவர் கைது செய்யப்பட்டார்.

இங்கு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியில், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு எதிராகவும், ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யக் கோரியும், அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கு மேல், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யும்படி கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.