Air India fined Rs 30 lakh over death of man, 80, in wheelchair incident | வீல் சேர் கிடைக்காததால் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: வீல் சேர் கிடைக்காததால், அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 12ம் தேதி அமெரிக்காவில் இருந்து வயதான முதிய தம்பதி மும்பை வந்தனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வீல்சேர் வசதி தேவை எனக் கூறியிருந்தனர். மும்பை வந்ததும், போதுமான வீல் சேர் இல்லாததால் மனைவிக்கு மட்டும் வீல் சேர் ஏற்பாடு செய்யப்பட்டது. கணவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், மனைவியை தனியாக அனுப்ப விரும்பாத கணவர், நடந்தே சென்றார். சுமார் 1.5 கி.மீ., நடந்து சென்ற அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் டிஜிசிஏ பிறப்பித்த உத்தரவில், ‛‛ தேவையானவர்களுக்கு வீல் சேர் சேவையை ஏற்படுத்தி தருவது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் கடமை. உயிரிழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காதவாறு இருக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையை அளிக்கவில்லை. ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.