உங்களுக்காக ஒரு பைக் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் Hero Splendor பைக்கை ஆன்லைனிலேயே வாங்கலாம். Flipkart தளத்திலிருந்து ஆர்டர் செய்து அதுவும் குறைந்தபட்ச EMI தவணையில் உங்களின் பைக் கனவை நனவாக்கலாம். இந்த பைக் உங்களின் சிறந்த மைலேஜ் கொடுக்கும். நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றது. இந்நிலையில், இந்த பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
Hero Splendor பிளஸ் பைக் விலை
ஹீரோ நிறுவனத்தின் இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.79,861. இவ்வளவு தொகையை உங்களால் ஒரே நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றால், ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் குறைந்த இஎம்ஐ தவணையில் வாங்க முடியும். அதுவும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து ஸ்பிளெண்ட் பிளஸ் பைக்கை வாங்கலாம். இந்த பைக்கின் மாதாந்திர EMI, ரூ.2,808 மட்டுமே செலுத்தினால் போதும். 5 வருட வாரண்டியும் இந்த பைக்கிற்கு உண்டு.