வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: தொடர்ச்சியாக பரோல் வாங்கி வெளியே வரும் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு, இனி அரசின் அனுமதியில்லாமல் பரோல் வழங்க கூடாது என ஐகோர்ட் கண்டிப்பு காட்டியுள்ளது.
ஹரியானாவில், ஆசிரம பெண்கள் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு
ஹரியானாவில், ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், இரு கொலை வழக்குகளில் ஆயுள் மற்றும் ஆசிரம பெண்கள் இவருவரை பாலியல் பலாத்கார செய்த வழக்கில் 2017-ம் ஆண்டு 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று ரோஹ்தக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்தா 2022 ம் ஆண்டு துவங்கி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பல முறை பரோல் பெற்று வெளியே வந்தார். கடைசியாக கடந்த ஜன.19-ம் தேதி 50 நாள் பரோல் வழங்கியதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இப்படி அடிக்கடி பரோல் பெற்று வருவதும், நீதிமன்றம் இஷ்டத்திற்கு பரோல் வழங்குவது குறித்தும் பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் கடந்த 4 ஆண்டுகளில் 9 முறை பரோல் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இப்படி இஷ்டம் போல் பரோல் வழங்குவது சரியல்ல. இனி அவரது பரோல் மனுவை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு அனுமதித்தால் மட்டுமே பரோல் வழங்க பரிசீலிக்கலாம். எனவே வரும் மார்ச் 10-ம் தேதிக்கு சாமியார் குர்மீத் ராம் ரஹீம் கோர்ட்டில் சரணடைந்து சிறையிலடைக்க வேண்டும் என அரியானா அரசுக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement