ராம்நகர் : ”லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வர உள்ளதால், ஆயத்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள அலுவலர்கள், பணியாளர்கள், அன்றாட அலுவலக பணியுடன், தேர்தல் பணிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என, மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
ராம்நகர் மாவட்ட ஊராட்சி மன்றத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆயத்த கூட்டம், மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:
தேர்தல் பணிக்கு அலுவலர்கள், பணியாளர்கள் ஒதுக்கீடு, ஓட்டுச்சாவடிக்கு உள்கட்டமைப்பு வசதிகள், சாய்வுதளம் அமைத்தல், பாதுகாப்பு, போலீசார் இருப்பு, சோதனைச் சாவடி அமைக்கும் பணிகள் தாமதமின்றி நடக்க வேண்டும்.
எழுதுகோல் உள்ளிட்ட இதர பொருட்களை வாங்குதல், போக்குவரத்து ஏற்பாடுகள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி, பதற்றம் மற்றும் அதிக பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பணிச்சுமையை பிரித்து கண்காணிக்க வேண்டும்.
தேர்தல் பணிக்காக நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, மாவட்டம் முழுதும் தேவையான இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையான நிகழ்வுகளுக்கு போலீஸ் துறை அதிகாரிகளின் அனுமதியை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பணி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள். இடம்: ராம்நகர்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement