முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன், பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக கடந்த மூன்று வாரங்களாகப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சந்தேஷ்காலி கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட, கிராமத்துக்குள் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும்நுழைவதைத் தடுக்கும் வண்ணம் கிராமத்தைச் சுற்றி போலீஸார் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், ஷாஜகான் ஷேக்கை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். ஆனால், ஜனவரி 5-ம் தேதியே தலைமறைவானதால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஷாஜகான் ஷேக்கை கைதுசெய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூற, இன்னும் ஏழு நாள்களில் அவரைக் கைதுசெய்வோம் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.
இதையடுத்து, ஷாஜகான் ஷேக் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியும், அதனால்தான் ஒரு வாரத்தில் கைதுசெய்வோம் என்று கூறுகிறார்கள் என்று பா.ஜ.க குற்றம்சாட்டியது. இந்த நிலையில், 55 நாள்களாகத் தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை, வடக்கு 24 பர்கானாஸிலுள்ள மினாகான் பகுதியில் மேற்கு வங்க போலீஸ் இன்று கைதுசெய்திருக்கிறது.

இதுகுறித்து, மினாகான் பகுதியின் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி மினுல் இஸ்லாம் கான், “திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் மேற்கு வங்க போலீஸாரால் வடக்கு 24 பர்கானாஸிலுள்ள மினாகான் பகுதியில் கைதுசெய்யப்பட்டார். இன்று மதியம் 2 மணிக்கு பாசிர்ஹத் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY