வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ரூ. 538 கோடி வங்கி மோசடி வழக்கில் சிறையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் புற்றுநோய் சிகிச்சை பெற சிறப்பு கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டதாக வெளியாகியுள்ளது.
முன்னணி விமான சேவை நிறுவனமான ‛ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனர் நரேஷ் கோயல் 74, கனரா வங்கியில் ரூ. 538 கடன் பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் நரேஷ் கோயல் இவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது..இதில் பண மோசடி வழக்கில், கடந்த ஆண்டு மும்பையில் நரேஷ் கோயலை அமலாக்கத் துறையினர் கைது செய்து மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள 2 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கிட அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே மருத்துவ அறிக்கை ஆவணங்களை ஆய்வு செய்து 2 மாதம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement