சோழதேவனஹள்ளி : பெங்களூரின் சோழதேவனஹள்ளியில் வீடு ஒன்றில், வெளிநாட்டு பிரஜைகள் போதைப்பொருள் விற்பதாக, தகவல் வந்தது. இதையடுத்து சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று காலை அங்கு சோதனை நடத்தினர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 730 கிராம் எடையுள்ள கஞ்சா உட்பட பலவிதமான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 2.32 கோடி ரூபாய். போதைப் பொருள் விற்ற, நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் குவாசை, 32, ஜெய்னாஸ் சைப்ரிலன் ஒகோயோ, 38, காலு சுக்வானன்னு, 40, ஆகியோரை கைது செய்தனர்.
மூவரும் சுற்றுலா மற்றும் வியாபார விசாவில் பெங்களூருக்கு வந்தனர். வாடகை வீட்டில் தங்கினர். தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் மூலம், போதைப் பொருட்களை வரவழைத்து விற்பனை செய்து வந்தனர். இவர்களில் ஒருவர், போதைப் பொருள் வழக்கில் போலீசாரிடம் சிக்கி, கைதாகி சிறையில் இருந்தார்.
ஜாமினில் வெளியே வந்து, மீண்டும் போதைப் பொருள் விற்றதாக, போலீசார் தெரிவித்தனர்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement