பாலியல் வன்கொடுமை முயற்சி; தப்பி ஓடிய பெண்ணின் உயிரை பறித்த கார் – துப்பாக்கியால் சுட்ட போலீஸ்

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்த, கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பவித்ராவும் காதலர்கள். இருவரும் கடந்த 24-ம் தேதி இரவு, கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அதிகாலை சுமார் 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்திருக்கும் கோனேரிக் குப்பத்தை தாண்டி சென்று கொண்டிருந்தனர். தாக்குதலில் காயமடைந்த போலீஸார் அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்து வந்த இரண்டு … Read more

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். உயர்கல்வியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1 ஆம் நாள் … Read more

வியாஸ் மண்டபத்தின் கூரைப்பகுதியை முஸ்லிம்கள் பயன்படுத்த தடை கோரி மனு

புதுடெல்லி: வியாஸ் மண்டபம் சர்ச்சை தொடர்பாக வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்து தரப்பு மேலும் ஒரு மனு அளித்துள்ளது. அந்த மனுவில், மசூதி வளாகத்திலுள்ள மண்டபத்தின் கூரைப்பகுதியை முஸ்லிம்கள் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. இதை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. 1664 இல் அவுரங்கசீப் ஆட்சியில் இக்கோயிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. இம்மசூதியினுள் உள்ள ஒசுகானாவின் ஒரு ஓரத்தின் கீழ் … Read more

Deepika Padukone: கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர்.. குஷியில் ரசிகர்கள்

Actress Deepika Padukone Ranveer Singh Announce Pregnancy : பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி

பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடியில் கோவில்பட்டியை சேர்த்த துணி வியாபாரி ரூ.2997யை இழந்துள்ளார்.

ஐபிஎல் மோகம்… வீரர்களை கைக்குள் வைக்க பிசிசிஐ புதிய திட்டம் – என்ன விஷயம்?

India National Cricket Team: கிரிக்கெட் விளையாட்டு என்பது தற்போது அதன் புதிய பரிணாமத்தில் பயணித்து வருகிறது. டெஸ்ட், ஓடிஐ, டி20 போன்ற பார்மட் மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, சர்வதேச கிரிக்கெட் vs ஃபிரான்சைஸ் கிரிக்கெட் என்ற பிரச்னையும் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் என்பது உலகளவில் தேசிய அணிகள் தங்களுக்குள் மோதும் அரங்காக உள்ள நிலையில், பிரான்சைஸ் கிரிக்கெட் விறுவிறுப்பையும் பணத்தையும் பிரதானமாக கொண்டு இயங்கி வருகிறது. பிரான்சைஸ் கிரிக்கெட், விளையாட்டை சிதைக்கிறது என … Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லை; நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்! ஆர்.பி. உதயகுமார்

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும், பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விரும்பமனு பெற சென்னைக்கு வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு … Read more

'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினரைப் பாராட்டிய கமல்ஹாசன், உதயநிதி

சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, லால் ஜுனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், கலித் ரகுமான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்தவாரம் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. சந்தான பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ரோஷினி நடிப்பில் 1991ல் வெளிவந்த 'குணா' படத்தில் இடம் பெற்ற 'டெவில்ஸ் கிச்சன்' என்றழைக்கப்பட்ட குகை தான் இந்த மலையாளப் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. அந்த இடத்தில் 'குணா' படத்தின் … Read more

Indian civilian team visited Maldives | மாலத்தீவுகளுக்கு சென்றது இந்திய சிவிலியன் குழு

மாலே: மாலத் தீவுகளில் உள்ள மூன்று இந்திய விமானப் படை தளங்களை பராமரிக்கும் பணிக்காக, இந்திய சிவிலியன் குழு அங்கு சென்றடைந்தது. தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக, சீன ஆதரவாளர் முகமது முய்சு, கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றார். ஆதரவு இதைத் தொடர்ந்து, மாலத்தீவுகள் மற்றும் இந்தியா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா குறித்தும் அந்த நாட்டின் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில், தன் சீன ஆதரவு … Read more

Thalapathy 69: வெற்றிமாறனுக்கு வாய்ப்பே இல்லையாம்.. விஜய்யோட தளபதி 69 படத்தை இவர் இயக்கப் போறாரா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 படத்தில் தான் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தான் அந்தப் படத்தை தயாரிக்க போவதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை யார் இயக்கப் போகிறார் என்கிற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.