மாடர்ன் கெட்டப்புக்கு மாறிய ரட்சிதா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. அதன் பிறகு பல தொடர்களில் நடித்தவர், பிக்பாஸ் சீசன் -6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் சினிமாவில் உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ரட்சிதா, தற்போது, பயர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் கதையின் நாயகியாக ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். கிளாமர் கலந்த மாடர்ன் கெட்டப்புகளில் நடிப்பதற்கும் அவர் தயாராகி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் … Read more

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்.. திருமாவளவனின் பங்கு அதிகம்.. மாரி செல்வராஜ் ஷேரிங்ஸ்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மாமன்னன் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எழுச்சித் தமிழர் விருது வழங்கப்பட்டது. அதனையடுத்து விழாவில் பேசிய மாரி செல்வராஜ் திருமாவளவன் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை பேசினார். அது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாட்டில் இலங்கை அர்பணிப்புடன் இருக்கும் 

அதிகார மோதல்கள் இன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாடுகளை பேணுவதில் இலங்கை அர்பணிப்புடன் இருக்குமென இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடல்சார் செயற்பாடுகளின் சுதந்திரத்திற்காக இலங்கை அர்பணிப்புடன் இருப்பதாலேயே செங்கடல் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை முன்வந்திருப்பதாகவும், ஆறு நாள் யுத்தத்தின் விளைவாக சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அறிவுறுத்தினார். அதனால் வரையறைகள் அற்ற … Read more

Sandeshkhali: 55 நாள்கள் தலைமறைவு… திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் கைது!

முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன், பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக கடந்த மூன்று வாரங்களாகப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சந்தேஷ்காலி கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட, கிராமத்துக்குள் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும்நுழைவதைத் தடுக்கும் வண்ணம் கிராமத்தைச் சுற்றி போலீஸார் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். ஷாஜகான் ஷேக் – திரிணாமுல் காங்கிரஸ் – Sandeshkhali … Read more

நிதி வசதியில்லா கோயில்கள் திருப்பணிக்கு நிதி: அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு, நிதி வசதியில்லாத கோயில்கள் திருப்பணிக்கு நிதி, அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அறநிலையத் துறை ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், அறநிலையத் துறையின் … Read more

இமாச்சலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, ரவி தாக்கூர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜக ஆளும் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் மைதானத்தில் இருந்து அந்த 6 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை சிம்லாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டதாக ஊடக … Read more

பிப்ரவரி 29 ‘லீப்’ தினத்தைக் கொண்டாட டூடுல் வெளியிட்ட கூகுள்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 லீப் தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுபொறி டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே பிப்ரவரி 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது. தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் … Read more

மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மிம்மிக்ரி!

கள்ளக்குறிச்சி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிரடியாய் பேசிய வைகைசெல்வன், மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது!  என பஞ்ச் டயலாக் பேசி கைதட்டுக்களை பெற்றார்…

`48 வருஷம் கழிச்சு என் கனவு நிறைவேறியிருக்கு!' – 16 வயதினிலே பட டாக்டர் சத்தியஜித்

கன்னடத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் புல்லட். நடிகர் தர்ம கீர்த்திராஜ் நடிப்பில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் சப்ஜெக்டாக வந்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சத்தியஜித். சில தினங்களுக்கு முன், இந்தப் படத்தின் போஸ்டர்கள் பெங்களூரு வீதிகளில் தென்பட, அதில் எங்கேயோ பார்த்த ஒரு முகம். உற்றுப் பார்த்தால், அட.. நம்முடைய `16 வயதினிலே’ வெர்ட்னரி டாக்டர். ‘புல்லட்’ படத்தை இயக்கியிருப்பதுடன் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கும் சத்தியஜித், நம்ம ‘மைல்ல்ல்’ டாக்டரேதான். பெங்களூருவில் வசித்து வரும் சத்தியஜித்தை மொபைலில் பிடித்தோம். ”சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல டி.எஃப்.டி படிச்சது 1976. … Read more

இந்தியாவிலேயே முதல்முறை… குறைந்த விலையில் வருகிறது ஜியோ 5G மொபைல்கள்!

Jio Qualcomm 5G Smartphone: ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, ஏர்டெல், வோடபோன் ஐடியோ போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம் தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி வகித்து வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் மொபைல் சார்ந்த துறையில் கால்பதிப்பது இது முதல்முறை அன்று, ரிலையன்ஸ் மொபைல்கள் பலரும் நியாபகம் இருக்கும். தற்போதும் 2ஜி, 4ஜி மொபைல்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  அந்த வகையில், தற்போது ரிலையன்ஸ் … Read more