மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் இல்லாததை அடுத்து வாடகை கட்டிடத்தில் இயங்க முடிவு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடம் அடிக்கல்லுடன் நின்று போனதை அடுத்து ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இதற்கான நிரந்தர கட்டிடம் கட்ட எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ராமநாதாபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் பயின்று வருவதால் இவர்களுக்குத் … Read more

Occupying house of 41 rescued from Uttarakhand mine demolished | உத்தரகண்ட் சுரங்கத்தில் 41 பேரை மீட்டவரின் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

புதுடில்லி : உத்தரகண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த, 41 தொழிலாளர்களை மீட்ட ‘எலி வளை’ சுரங்க நிபுணர் வக்கீல் ஹசனின் டில்லியில் உள்ள வீடு, ஆக்கிரமிப்பு காரணமாக நேற்று இடிக்கப்பட்டது. சிறிய சுரங்கம் உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா சுரங்கப் பாதை அமைக்கும் பணியின் போது, கடந்த நவம்பரில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பல நாட்களாக சுரங்கத்தில் தவித்த அவர்களை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில், டில்லியில் இருந்து 24 எலி வளை … Read more

விஜய் 69 : உத்தேச இயக்குனர் பேச்சில் ஆர்ஜே பாலாஜி ?

அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு தீவிர அரசியலில் இறங்குவதாக விஜய் அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு தனது 69வது படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறார் விஜய். அவரது 68வது படமான 'கோட்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் 69வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த உத்தேச இயக்குனர்கள் பெயர் என சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தெலுங்கு இயக்குனர்கள் … Read more

World Seaweed Day | உலக கடற்புற்கள் தினம்

கடற்புற்கள் என்பது கடலுக்கு அடியில் வாழும் ஒரு தாவரம். இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. சில கடல்வாழ் உயிரினங்களுக்கு கடற்புற்கள் முக்கிய உணவாக உள்ளது. 1930களில் இருந்து கடல்புற்களின் பரப்பு குறைந்து வருகிறது. இவை குறைந்தால் கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடல் தண்ணீரை சுத்தப்படுத்துதல், மாசுக்களை கவர்தல் போன்றவை கடல்புற்களின் பணி. கடலில் ஏற்படும் கார்பனில் 18 … Read more

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.. குணா அண்ட் தி பாய்ஸ்.. வீடியோவே வந்துடுச்சே!

சென்னை: சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 22ம் தேதி மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 7 நாட்களில் 50 கோடி வசூலை சாத்தியமாக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த வாரம் கோலிவுட்டில் வெளியான படங்களை விட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியிருப்பதாகவும் இங்கேயே 10 கோடி வசூலை அந்த படம் ஈட்டும் என

"பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாததால், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை பிரதமர் புகழ்கிறார்" – திருநாவுக்கரசர்

“மோடி நினைத்திருந்தால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம்” என்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். திருநாவுக்கரசர் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில், எம்.பி-க்களுடான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், “எம்.பி-க்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். … Read more

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக தமிழக அரசு கருதக் கூடாது: உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக கருதக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா செல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கும்போது நூலக வரியும் சேர்த்து வசூலிக்கின்றன. நூலக வரியாக வசூலிக்கப்படும் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு வழங்க வேண்டும். மதுரை மாவட்ட மைய நூலகத்துக்கு மதுரை மாநகராட்சி ரூ.7 கோடி நூலக வரிபாக்கி வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 67 … Read more

மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி; பலர் காயம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியில் புதன்கிழமை இரவு சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தேவேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு சரக்கு வாகனத்தில் ஏறி தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த வாகனம், திண்டோரி மாவட்டம் பட்ஜார் கிராமத்துக்கு அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. … Read more

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது … Read more

தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள்-கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள் என கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளார்.