2025 ஆம் ஆண்டுக்குள் RE100 தரநிலையை எட்ட ஹூண்டாய் உறுதி

சென்னை, பிப்ரவரி 28, 2024: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) 2025க்குள் RE100 தரநிலையை அடைவதற்கான இலக்கை அடைவதன் மூலம் நீடித்த தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது.. இந்த நிறுவனம் தற்போது புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைப் பயன்படுத்தி தனது எரிசக்தி தேவையில் 64 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது, மேலும் நாட்டின் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்களை விட 100 சதவீத இலக்கை அடைய விரும்புகிறது. RE100 என்பது காலநிலை குழுவின் உலகளாவிய பெருநிறுவன புதுப்பிக்கத்தக்க ஆற்றல் … Read more

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் திருமதி கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றப் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

`ஸ்டாலினுக்கு உங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் பற்றி கவலையில்லை..!' – நெல்லையில் சாடிய பிரதமர் மோடி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, வெளித்துறைமுக  சரக்குப் பெட்டக முனைமம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு  அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைத்தார். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில், குலசேகரன்பட்டினத்தில் இருந்து ’ரோகிணி 6H- 200’ என்ற ராக்கெட் விண்வெளி ஆய்வுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது.  தூத்துக்குடி, நெல்லைக்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் திட்டம் – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இனி பேருந்து நடத்துநர்கள் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் வாயிலாக பயணிகளிடம் ரொக்கப் பணம், CARD மற்றும் UPI மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச் சீட்டு வழங்குவார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த … Read more

2030-க்குள் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ராஞ்சி: 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா தலைநகர் ராஞ்சியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், “இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக உள்ளனர். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நமது நாடும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரம் இன்று … Read more

தக் லைஃப் படத்துல ஜெயம் ரவி கேமியோ ரோல்.. அவரே சொன்ன தகவல்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி தற்போது தக் லைஃப் படத்தில் கெமியோ ரோலில் மட்டுமே நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி கொடுத்த உத்தரவு

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை அதிகாரி பூமிநாதனை, நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு  

இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து அதிரடி நீக்கம் – ஜெய்ஷா உத்தரவு

இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் புறக்கணித்ததால், பிசிசிஐ அவர்கள் மீது நடவடிக்கை  எடுத்துள்ளது. அவர்கள் இருவரும் ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என ஜெய்ஷா எச்சரித்தபோதும், அவரவர் மாநிலஙளுக்கான போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023 – … Read more

மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலி கான்

சென்னை நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலி கான் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் பிரபல நடிகர் மன்சூர் அலி கான் தனது கட்சியின் பெயரான தமிழ் தேசியப் புலிகள் என்பதை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார்.  இந்நிலையில் இன்று மன்சூர் அலிகான் ஓரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், ”மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி … Read more

பாஜக தலைவர்களுடன் பேசி வருகிறோம்.. சீட் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.. ஓபிஎஸ் பரபர பேட்டி!

சென்னை: பாஜக கூட்டணியில் தொடர்கிறோம் என்றும், கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து Source Link