நாளை முதல் காலவறையற்ற உண்ணாவிரதம்! இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் ஏற்கனவே கலந்துகொண்ட ஜாக்டோ, ஜியோ அமைப்புகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, தன்னிச்சையாக போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், ஆசிரியர் சங்கங்கள் தனியாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. அதன்படி,  தொடர் … Read more

அட! விஜயதரணி பாஜக போனதற்குக் காரணம் இதுதானா? கருத்து பேசிய விளவங்கோடு மக்கள்!

விளவங்கோடு: விஜயதரணி பாஜகவுக்கு மாறியுள்ளதை அவரது தொகுதி மக்கள் எப்படி எடுத்துக் கொண்டுள்ளார்கள்? அவர்களின் மனநிலை என்ன? விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அப்படி இருக்கும்போது அதனைத் தூக்கி எறிந்துவிட்டு கட்சி மாறி இருக்கிறார். அவரது Source Link

Drinking water cut in Bangalore severely affects people | பெங்களூரில் குடிநீர் கட் மக்கள் கடும் பாதிப்பு

பெங்களூரு ; பழுது நீக்கும் பணியால், பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால், ஆறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் குறைந்ததால் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கும், தொழில்துறையினருக்கும் தண்ணீர் வினியோகிப்பதில் அரசு திணறுகிறது. இதற்கிடையில், பெங்களூரு ஜம்பு சவாரி தின்னே பகுதியில் குடிநீர் குழாய்கள் பழுது … Read more

காதலரை மணக்கும் 'ஆடுகளம்' நாயகி டாப்சி

தமிழில் 2010ம் ஆண்டு வெளிவந்த 'ஆடுகளம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் தமிழில் 'வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி,' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிரபலமானவர் டாப்சி. சமீபத்தில் வெளிவந்த 'டங்கி' படத்தில் ஷாரூக்கான் ஜோடியாகவும் நடித்துள்ளார். அடுத்து சில ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். டாப்சி அவருடைய பத்து வருடக் காதலரான மதியாஸ் போ என்பவரை வரும் மார்ச் மாதம் … Read more

சாரிப்பா.. கல்யாணத்துக்கு வர முடியல.. ரோகிணி தியேட்டர் ஓனர் மகனை நேரில் சந்தித்து வாழ்த்திய விஜய்!

சென்னை: ரோகிணி தியேட்டர் ஓனர் பன்னீர் செல்வம் மகன் ரேவந்த் சரண் திருமணம் சென்னையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புடைசூழ நடைபெற்றது. ரேவந்த் சரண் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் அட்சதை தூவி வாழ்த்திய காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின. ரேவந்த்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்

மும்பை, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ வலியுறுத்துவது உண்டு. அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு. ஆனால் பிரபல … Read more

ரூ.9 லட்சத்தில் வரவுள்ள ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம் – Automobile Tamilan

வரும் மார்ச் 2025-ல் விற்பனைக்கு வெளியாக உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி காரை பற்றி முக்கிய தகவல்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 9 லட்சத்திற்கும் குறைவான விலையில் தொடங்க உள்ள இந்த காரானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்கும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மாடாலானது இந்திய சந்தையில் கிடைக்கின்ற மிகக் கடுமையான போட்டியாளர்களான  டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களை … Read more

பாசிக்குடாவில் “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” வேலைத் திட்டம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல்

பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் இரண்டாவது சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில்  (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சது விக்ரமசிங்க “புளு பிளேக் பீச்” வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார். மட்டக்களப்பு … Read more

பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011-16ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டென்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பெயரில் பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு … Read more