Month: February 2024
ஹாலிவுட் செல்லும் சோபிதா துலிபாலா
பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 'தி நைட் மானேஜர்', 'மேட் இன் ஹெவன்' வெப் தொடர்கள் மூலம் பரபரப்பு கிளப்பியவர். தற்போது இந்தியாவில், இந்திய கலைஞர்களை கொண்டு தயாராகும் ஹாலிவுட் படமான 'மங்கி மேன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா வரிசையில் ஹாலிவுட்டுக்கு செல்கிறார். ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான … Read more
Simbu birthday: சிம்பு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.. என்ன வயசு தெரியுமா?
சென்னை: நடிகர் சிம்பு நாளைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே 6 மாதத்திலிருந்து படங்களில் நடித்துவரும் சிம்பு நாளைய தினம் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி அவரது ரசிகர்களும் பல்வேறு கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர். தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என ஹாட்ரிக் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள சிம்பு,
அரச சேவையில் சேவை நெருக்கடி தீர்வு பொறிமுறையை அறிமுகப்படுத்த சர்வதேச தொழிலாளர் தாபனம் உதவி…
அரசாங்க சேவையில் தொழில் உரிமைகள் தொடர்பான நெருக்கடி நிலைகளுக்கான தீர்வு மற்றும் தடுப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் தாபனத்திடம் (ILO) கோரிக்கை விடுத்தார். சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் (ILO) வதிவிடப் பணிப்பாளர் ஜோனி சிம்சன் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஆகியோரை நேற்று (2024.02.01) அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், முன்மொழிவுக்கும் … Read more
“விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஏனெனில்…” – ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால், விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “மத்திய இடைக்கால பட்ஜெட் இது. நல்ல பட்ஜெட். இதை முழு பட்ஜெட் போல் எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். பெண்களுக்கு பல நல்லத் திட்டங்கள் தந்துள்ளனர். இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மக்களுக்கு நல்லது செய்யும் … Read more
பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன்? – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடெல்லி: பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சி வரம்பை உயர்த்துவது போன்ற ஜனரஞ்சக அறிவிப்புகள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த … Read more
Indraja Shankar:ரோபோ சங்கர் மகளுக்கு நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Indraja Shankar Engagement: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், அவ்விழாவில் எடுக்கபட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
விஜய் தொடங்கிய கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்: அமைச்சர் முத்துசாமி
Kovai: கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
டெவில் விமர்சனம்: விதார்த், பூர்ணாவின் அட்டகாச நடிப்பு; `இசை' மிஷ்கின்; படமாக எப்படி?
சிறு விபத்தால் உருவாகும் ஓர் ஆண்-பெண் நட்பு, ஒரு பெண்ணின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே இந்த ‘டெவில்’! டிராவலரான ரோஷன் (திரிகுன்) பைக் ஓட்டி வரும்போது எதிர்ப்பாராத விதமாக ஹேமா (பூர்ணா) தன் காரால் இடித்து விடுகிறார். அதில் ரோஷனுக்கு கையில் பலத்த காயம் ஏற்படுகிறது. தன்னால் பாதிக்கப்பட்ட ரோஷனை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹேமா. ரோஷனுக்காக சமையல் செய்து தருவது, காரில் ஊர் சுற்றிக்காட்டுவது, ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் செல்வது என ரோஷனுடன் நட்பை … Read more