கியான்வாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட இடைக்கால தடை விதிக்க அலகாபாத் ஐகோர்ட் மறுப்பு
புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் தரைத்தளத்தின் கீழ் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more