புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன
2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கான அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (02) வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் https://moe.gov.lk/ பெற்றுக்கொள்ள முடியும். மேலும், மாணவர்களின் புள்ளி மட்டங்களுக்கு அமைய, அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பரிசீலிக்க முடியும்