பிளிப்கார்டின் ஒரே நாள் டெலிவரி சேவை: எப்படி பெறுவது?

இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் ஆர்டர் செய்த அன்றே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக ஆன்லைனில் மூலம் பொருட்கள் வாங்கும் போக்கும் மக்களிடையே அதிகிரித்திருப்பதாலும், ஆன்லைன் ஷாப்பிங் துறையில் நிறைய போட்டிகள் உருவாகியிருப்பதாலும் புதிய யுக்திகளை கையாள வேண்டிய இடத்துக்கு பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. அதன் ஒருபகுதியாக தான் இப்போது “Same Day Delivery” என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது பிளிப்கார்ட். முதல் கட்டமாக பிளிப்கார்ட் இந்தியாவில் 20 … Read more

மாநகராட்சி, நகராட்சியில் காலியாக உள்ள 1933 பொறியாளர் பணியிடங்களுக்காக விண்ணப்ப தேதி அறிவிப்பு!

சென்னை: மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள  1,933 பொறியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப தேதி தொடர்பான  அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக  உள்ள அலுவலக உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகள் என மொத்தம் 1,933 காலியிடங்கள் … Read more

திருப்பத்தூரில் அதிசயம்.. சீனிவாசன் வீட்டுல ஆச்சரியம்.. தாசில்தாரே கிளம்பி கந்திலிக்கு வந்துட்டாராமே

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் ஆச்சரியம் நடந்துள்ளது.. இதை பார்க்க சுற்றுவட்டாரமே திரண்டு சென்றிருக்கிறது.. என்னதான் நடந்தது? சில நாட்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள கந்திலி என்ற கிராமம் குறித்த செய்திகள் மீடியாவில் பரபரப்பாக வெளியாகியிருந்தது.. அதாவது, காளான் பாறை: அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய Source Link

பத்ம விபூஷண் சிரஞ்சீவிக்கு பிரம்மாண்ட விழா எடுக்க தயாராகும் தில் ராஜு

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் சிரஞ்சீவிக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்தவருமான தில் ராஜு, சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க … Read more

ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. அதுவும் அந்த மாஸ் இயக்குநர் படத்தில்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் நடித்துள்ள மங்கி மேன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த மங்கி மேன் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நடிகை சோபிதா துலிபாலா, ராமன் ராகவ் 2.0

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு கவர்னர் அழைப்பு

ராஞ்சி, நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினமா செய்தார். இரவில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே நேற்று ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க … Read more

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி

பாங்காக், தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் மிதுன் மஞ்சுநாத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 9-21, 11-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன் யிடம் … Read more

நேபாளத்தின் முதல் பணக்காரரின் சகோதரர் அதிரடி கைது; புலனாய்வு துறை நடவடிக்கை

காத்மண்டு, நேபாள நாட்டில் பன்ஸ்பாரி என்ற பெயரிலான அரசு தோல் காலணி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குரிய நிலங்களை அருண் சவுத்ரி என்பவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு தன்வசப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அந்நாட்டின் மத்திய புலனாய்வு கழகம் (சி.ஐ.பி.) விசாரணை நடத்தி உள்ளது. இதன்பின் காத்மண்டு நகரில் உள்ள லஜிம்பத் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து அருண் சவுத்ரியை சி.ஐ.பி. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவரை 4 நாட்கள் காவலில் வைக்க … Read more

I.N.D.I.A: அசராமல் விளாசும் மம்தா… அடிபணியுமா காங்கிரஸ்?!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க, சுமார் 350 தொகுதிகளில் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்றெல்லாம் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பேசினர். ஆனால் இப்போது, அதற்கான அறிகுறியே தெரியவில்லை. மம்தா பானர்ஜி ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ‘இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறேன்’ என்று சொல்லும் முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மேற்கு வங்கத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம்’ என்கிறார். அதுவும், ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் … Read more

‘சாதி, மதம் அற்றவர்’ என சான்றிதழ் வழங்க வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், சாதி, மதம் அற்றவர் என தனக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு … Read more