Russian President Putin earned Rs. 6.25 crores in 6 years | ரஷ்ய அதிபர் புடின் 6 ஆண்டுகளில் சம்பாதித்தது ரூ.6.25 கோடியாம்

மாஸ்கோ : ரஷ்ய அதிபராக பதவி வகித்த ஆறு ஆண்டுகளில் விளாடிமிர் புடின் 6.25 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த 2000ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றார். இதையடுத்து, நான்காவது முறையாக கடந்த 2018ல் மீண்டும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்க பட்டார். புடினின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மார்ச் 17ல் … Read more

அந்த மூணு வருஷம் வாழ்க்கையில் நடக்கக்கூடாது எல்லாம் நடந்துடுச்சி.. விஷ்ணு விஷால் வேதனை!

சென்னை: வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆன விஷ்ணு விஷால் குறகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் நிலையான  ஒரு  இடத்தை பிடித்தார். தற்போது இவர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9ந் தேதி வெளியான நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான

இமாசல பிரதேசம்: கடும் பனிப்பொழிவால் மூடப்பட்ட 566 சாலைகள்; மின் விநியோகம் பாதிப்பு

சிம்லா, இமாசல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், 6 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் 566-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 700 மின் விநியோக திட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. கின்னார், குல்லு, லஹால்-ஸ்பிட்டி, சம்பா மற்றும் சிம்லா மாவட்டங்களில் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. சிர்மார், கங்ரா மற்றும் மாண்டி மாவட்டங்களில் புதிதாக பனிப்படலம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி இமாசல பிரதேச பொதுப்பணி துறை மந்திரி விக்ரமாதித்ய சிங் கூறும்போது, 138 சாலைகளில் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத்தை வீழ்த்தி கோவா வெற்றி

ஐதராபாத், 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் – கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி சார்பில் கார்லோஸ் மார்டினெஸ் ஆட்டத்தின் 7-வது மற்றும் 30-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். ஐதராபாத் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கோவா அணி … Read more

ஜப்பானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர். மேலும் கடந்த 16-ந் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் உள்ள நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டிற்கு சொந்தமான விமானம், கேத்தே பசிபிக் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்தநிலையில் ஜப்பானில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஹோன்சு … Read more

`பிரமாண்டத் திருக்கோயில்'- 7 நிலை கோபுரம்; இன்று கும்பாபிஷேகம் காணும் அவிநாசி திருத்தலச் சிறப்புகள்!

சுந்தர்மூர்த்தி நாயனார்… சைவம் தழைக்க மண்ணுலகில் தோன்றிய சிவத்தின் பிம்பம். தோழமை பாவத்தோடு அந்தப் பரமனைப் பாடிப் பணிந்த புண்ணியன். பித்தா என்று பெருமானை அழைக்கும் பேறுபெற்றவர். அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று நடந்த தலம்தான் அவிநாசி. புராண காலத்தில் இத்தலத்தின் திருப்பெயர் திருப்புக்கொளியூர். தட்சிண காசி என்றும் இதற்குப் பெயர். இங்கே ஈசன் அவிநாசியப்பராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்பிகை ஶ்ரீகருணாம்பிகை என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்தின் காலம் … Read more

ஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை சமீபத்தில், காணொலி வாயிலாக வழங்கியுள்ளது. தொடர்ந்து, தற்போது உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு … Read more

அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம்: கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை: சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 – 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் சில எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தாசில்தார், விஏஓ மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு: சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் … Read more

2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் ஃப்ளேயிங் XI: படிதார் அல்லது சர்ஃபராஸ் கான்? சிராஜ் இடத்தில் வாஷிங்டன்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தக்க பதிலடி கொடுக்க வியூகம் வகுத்துள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான புனேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அடுத்த போட்டியில் பெங்களூரில் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்தது. 2020 ஆம் ஆண்டுஅடிலெய்டு டெஸ்டில் வெறும் 36 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தபோது, அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் … Read more

கல்யாணியை மும்பை மீடியாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்று தற்போது பாலிவுட் வரை தனது எல்லையை விரிவு படுத்திவிட்டார். அதிலும் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவை பாலிவுட் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விட்டது. அதுமட்டுமல்ல மும்பை மீடியாக்களிடமும் எந்தவித பந்தாவும் இன்றி பழகி வருகிறார். குறிப்பாக புகைப்பட கலைஞர்களின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டார் ராஷ்மிகா. இந்த வகையில் சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார் ராஷ்மிகா. அந்த … Read more