“இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது” – காங். எம்.பி சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது எனவும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இடைக்கால பட்ஜெட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய உரைகளில் இதுவும் ஒன்று. பட்ஜெட் உரையில் பெரிதாக எதுவும் இல்லை. வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள் மிகுந்து காணப்பட்டன. செயல்பாடுகளில் மிகக் குறைவான உறுதிப்பாடே இருந்தது. அந்நிய … Read more

சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழக்க அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை மற்றும் பல இடங்களில் சாதி சான்றிதழ் என்பது இன்றியமையாததாகிறது. இந்த சாதிச் சான்றிதழ்களை அந்தந்த பகுதியின் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.  ஆனால் இதற்குச் சமீபகாலமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது  இந்த சாதி சான்றிதழ் ஒருவரைத் தாழ்வாக நினைக்க தூண்டுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். அத்தகையோர் தாங்கல் சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று … Read more

கடவுள் அனுப்பி வைத்த குட்டி நண்பன் : மகன் பிறந்தநாளில் இயக்குனர் அட்லி நெகிழ்ச்சி

இயக்குனர் அட்லியும், நடிகை பிரியாவும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 9 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு மகன் பிறந்தான். அவருக்கு நீல் என்று பெயர் வைத்தார்கள். அதோடு அடிக்கடி மகனின் புகைப்படத்தை அட்லியும் பிரியாவும் அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் அட்லி, மகனுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டு … Read more

5 வருஷமா உருவாகும் மோகன்லால் படம்.. இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் போட்ட ட்யூனை கேளுங்க!

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மோகன்லால் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பரோஸ் திரைப்படத்திற்கு இசையமைக்க 12 வயதான சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு 17 வயதாகி விட்டது. படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது இசை ரெக்கார்டிங் குறித்த வீடியோ

`துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி..!' – காட்டமாக விமர்சித்த ஓபிஎஸ்

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையில் நடைபெற்ற தனது அணியில் உள்ள நிர்வாகி இல்ல திருமண விழாவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்தார். அதோடு, திருமணம் நடத்தி வைக்க மேடை ஏறிய ஓ.பி.எஸ்-ஸுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டதோடு, அவருக்கு வெள்ளி வாளும் பரிசாக வழங்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், `அதிமுக என்னும் கட்சியை அழிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!’ – … Read more

“இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்” – அமைச்சர் உதயநிதி @ இடைக்கால பட்ஜெட் 2024

சென்னை: மக்களவையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் குறித்த தனது கருத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. “ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க, … Read more

ஆட்சியமைக்க சம்பய் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு: இன்று ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் இன்று பதவியேற்க உள்ளார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநரை சந்தித்து புதன்கிழமை அன்று உரிமை கோரினார். இருந்தும் ஆளுநர் தரப்பில் … Read more

Budget 2024: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் நோக்கம்- நிதி அமைச்சர்

Budget 2024: வெவ்வேறு பிரிவினரை தனித்தனியாக இலக்காக கொண்டு அவர்களை மகிழ்விக்கும் சில அறிவிப்புகளை நிதி அமைச்சர் இன்று தனது உரையில் வெளியிட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல்

ராஞ்சி ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின்  கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தார். இந்நிலையில் இவர் மீது முறைகேடு புகார் எழுந்தது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை ஹேமந்த் சோரன் நிராகரித்தார். கடந்த மாதம் … Read more