“1.5 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்” – மத்திய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்தை சாடிய ராகுல் காந்தி

டெல்லி: “அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “ஆயுதப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அக்னிபத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் … Read more

ரஷ்ய அதிபராக 6 ஆண்டுகளில் ஒரு மில்லியன் டாலர் சம்பாதித்த விளாதிமிர் புதின்

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக … Read more

ரயில்வே பட்ஜெட், ஒன்றிய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது ஏன்?

மத்தியில் பாஜக அமைந்த பிறகு ரயில்வே துறைக்கு தனியாக சமர்பிக்கப்பட்ட பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. அதற்கான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

Union Minister Nirmala Sitharaman presents the Union Interim Budget 2024-25 at the Parliament | இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா

புதுடில்லி: தேர்தல் நெருங்குவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2024 க்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்லி.,யில் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் ஜனாதிபதி மாளிகைகக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி. பட்ஜெட் தாக்கல் செய்த போது முன்னுரையில் நிதி அமைச்சர் நிர்மலா பேசியதாவது: 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு … Read more

ஆரம்பமே இப்படியா…? – 2024ன் முதல் மாதம் ஓர் அலசல்

2023ம் ஆண்டில் தியேட்டர்கள், ஓடிடி தளங்கள் என 250 படங்கள் வரை வெளியானது. அது போலவே இந்த ஆண்டிலும் அதிகமான படங்கள் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எத்தனை படங்கள் வந்தால் என்ன அவற்றில் எத்தனை படங்கள் வெற்றி பெறுகிறது, வசூல் ரீதியாக லாபம் தருகிறது என்பது மட்டுமே கடைசியாக தேவைப்படுகிறது. 100 கோடி முதல் 600 கோடி வசூல் என வந்தாலும் அதில் எவ்வளவு லாபம் என்பதே கேள்வி. மொத்த வசூல் எவ்வளவு என்பது பெரிதல்ல, வரிகள், இதர … Read more

Vijayakanth – என் ஃப்ரெண்ட அரெஸ்ட் பண்ணுறீங்க?.. நள்ளிரவில் சசிகலாவுக்கு ஃபோன் போட்டு விஜயகாந்த் செய்த சம்பவம்

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த டிசம்பவர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அவரது உடலுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்திவிட்டு வந்தனர். அவர் உயிரிடன் இருக்கும்போது அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் அவரது உயிரிழப்பை நினைத்து கண் கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகரும்

'நிதி மோசடி, போலி பே மாஸ்டர் முத்திரை’ – நல்லாசிரியர் விருது வாங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கடைவீதி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நெடுவாசலைச் சேர்ந்த கருப்பையா. இவர், கடந்த 2010 – ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதும், அதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர். இந்நிலையில், ‘தலைமையாசிரியர் கருப்பையா முறையாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில்லை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளார். அதோடு, பே மாஸ்டர் … Read more

திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு: உதயநிதியுடன் அறிமுக நிகழ்வாக மாறும் ஆலோசனை கூட்டம்

சென்னை: திமுக தேர்தல் பணிக்குழு நடத்தும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டமானது, அமைச்சர் உதயநிதியை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும் மாறி வருகிறது. வாரிசு அரசியல் கட்சி என்று திமுக மீது விமர்சனங்கள் தொடர்ந்தாலும்,அவற்றை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த கட்சி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினை கட்சியினர் ஏற்றுக்கொண்டதைப்போல், அவரது மகன் உதயநிதிக்கும் கட்சியில் உரிய முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதில், சீனியர் முதல் ஜூனியர் வரை யாரும் விதிவிலக்கல்ல. உதயநிதியும் கட்சியில் தனக்கான … Read more

வாரணாசி நீதிமன்றம் அனுமதி: கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு

வாரணாசி: கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள தெய்வங்களை வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்துக்கள் முதல் முறையாக மசூதியின் தெற்கு பாதாள அறையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் வழிபாடு நடத்தினர். வழிபாடு நடப்பதற்கு முன்பாக காவல் ஆணையர் அசோக் முதா ஜெயின் மற்றும் கோட்ட ஆணையர் கவுசால் ராஜ் சர்மா ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக, … Read more

தனி ராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மலேசியா மன்னராக பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மலேசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் … Read more