பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2000 ரூபாயை எட்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில்நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.1500 அல்லது ரூ.2000 ஆக உயர்த்தலாம். அதன்பிறகு நாமெல்லாம் விறகு அடுப்பை பயன்படுத்தும் பழைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும். மத்திய அரசு. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ஏப்ரல் இறுதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். இல்லையென்றால் மே மாதத்திலிருந்து எங்கள் அரசாங்கம் அந்த … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: தமிழக வீரராக அஸ்வின் படைக்க உள்ள வரலாற்று சாதனை

தர்மசாலா, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 312 … Read more

ஆத்திரத்தை தூண்டிய ஹனிமூன் கேள்வி… டிவி லைவ் ஷோவில் காமெடியனை அறைந்த பாகிஸ்தான் பாடகி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர், டிவி லைவ் ஷோவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹனிமூன் குறித்து காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹா நகைச்சுவையாக பேசுவதும், பின்னர் அவர் தாக்கப்படுவதும் பதிவாகி உள்ளது. “ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். … Read more

Sterlite: `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது..!' – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை அதை ரத்து செய்து, மீண்டும் ஆலையைத் திறக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. … Read more

“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்” – அண்ணாமலை கண்டனம்

சென்னை: “திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, … Read more

இமாச்சல் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: முதல்வருக்கு எதிராக மாநில காங். தலைவர் போர்க்கொடி!

சிம்லா: குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில், முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரும் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங் மனைவியுமான பிரதிபா சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாநிலங்களவைத் தேர்தலில் … Read more

திமுக மீது காங்கிரஸ் மனக்கசப்பு – லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட ஆலோசனை?

கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட குறைவான சீட்களை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறி வருவதால், மனக்கசப்பில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. தனித்து போட்டியிட கூட தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.   

கர்நாடக முதல்வரிடம் சாதிவாரி  கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல்

பெங்களூரு சாதிவாரி  கணக்கெடுப்பு அறிக்கையை கர்நாடா முதல்வரிடம் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.    கடந்த 2014 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட்டார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு சாதிவாரி  கணக்கெடுப்பு முடிந்தது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பைப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான குழு நடத்தியது. தற்போது சித்தராமையா மீண்டும்  ஆட்சியில் உள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை முற்றிலும் அறிவியல் பூர்வமானது … Read more

துவாரகாவை தேடி கடலுக்குள் போன மோடி! கிருஷ்ணனின் நகரை வைத்து பிரதமர் போடும் மெகா பிளான்.. பின்னணி

காந்திநகர்: சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடலுக்கு அடியில் சென்று, மயில் இறகை வைத்து வழிபாடு நடத்தியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில், அவரது வழிபாட்டிற்கு பின்னால் உள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாபாரதம் போன்ற பண்டைய புராணகளில் துவாரகை நகரம் குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் கிருஷ்ணர் வாழ்ந்த பூமி என்றும் சொல்லப்படுகிறது. Source Link

Air India fined Rs 30 lakh over death of man, 80, in wheelchair incident | வீல் சேர் கிடைக்காததால் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: வீல் சேர் கிடைக்காததால், அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது. கடந்த 12ம் தேதி அமெரிக்காவில் இருந்து வயதான முதிய தம்பதி மும்பை வந்தனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வீல்சேர் வசதி தேவை எனக் கூறியிருந்தனர். மும்பை வந்ததும், போதுமான வீல் சேர் இல்லாததால் … Read more