கொல்கத்தா இன்று இரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர், ஹுக்ளி மற்றும் நாடியா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். மேலும் பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இன்று இரவு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாகத் […]