
இரண்டு முன்னனி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிம்பு
நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல் தயாரிக்கிறார். சரித்திர பின்னணியில் பிரமாண்ட படமாய் உருவாகிறது. இதற்காக சிம்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தன்னை தயார் செய்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இதையடுத்து தான் நடிப்பதற்கான புதிய படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பதற்காக செவன் ஸ்கிரீன் லலித் மற்றும் சத்யஜோதி தியாகராஜன் இருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் யார் சிம்பு கேட்கும் சம்பளத்தை தர தயாராக உள்ளார்களோ அவரின் தயாரிப்பில் சிம்பு நடிப்பார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.