தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது . இதற்கானத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (28) ஜப்பான் கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.
இவ் வாய்ப்புகளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கியமைக்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டின் நீதியமைச்சருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் கௌரவ அமைச்சரால் தெரிவிக்கபப்ட்டது.
ஜப்பானிய மொழி புலமை மட்டம் N4 விண்ணப்பதரிகள் SSW விசா பிரில் விண்ணப்பிக்க முடியும் . இதற்கென தகுதிகான் தேர்வு எழுத்து மற்றும் செயன்முறையில் நடாத்தப்படும்.
SWW மட்டம் 27 முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிப்பதுடன் அது நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என இக்கலந்துரையாடலில் பேசிய ஜப்பானிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இப் பரீட்சைக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் மற்றும் காணொளிகள் பரீட்சாதிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஜப்பானிய கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பிரதிநிதியாக சச்சியோ சுகியாமா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.