கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் (28) புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நேர்முகப்பரீட்சைகளை நடாத்தி வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏறக்குறைய 2000 கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.