சென்னை மக்களவை தேர்வில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனுக்களைப் பெறக் கால அவகாசம் புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களைத் தலைமை அலுவலகத்தில் 21.2.2024 முதல் 1.3.2024 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, […]