சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 ஆம் வாரமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை […]