வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடிவிடாது அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் கூட்டு வர்த்தகமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியமும் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தேசிய கடதாசி சங்கத்தினை 2013, 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை கடந்த (20) தேசிய பொருளாதார மற்றும் உள்ளக திட்டமிடல் தொடர்பான மேற்பார்வை குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதே செயற்குழுவின் தலைவர இவ்வாறு குறிப்பிட்டார்.
வாழைச்சேனைத் தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 இல் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றின் திருத்த வேலைகளுக்காக 1.2 அமெரிக்க டாலர் தேவைப்படுவதாகவும், திறைசேரியின் நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றும் இதன் போது கூறப்பட்டது.
இது அரச மற்றும் தனியாரின் கூட்டு வியாபாரமாக தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை வளாகத்தை சுற்றுலாக் கைத்தொழிலுக்காக உள்வாங்குவதாகவும், அதற்கான அனுமதி கிடைக்கப் பெறவில்லை என்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெளிவுபடுத்தினார்.
அத்துடன் 1.2 அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டு தொழிற்சாலையில் இயந்திரங்கள் திருத்தம் செய்யப்படுமாயின் ஒரு நாளுக்கு 5 தொன்கள் வீதம் உற்பத்தி இடம்பெறும் போது மாதத்திற்கு 22 மில்லியன் ரூபா இலாபம் ஈட்ட முடியும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
340 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் இந்த கைத்தொழிற்சாலையின் ஒரு பகுதியை சுற்றுலா வலயமாக மாற்றுவதற்காக கவனத்திற் கொள்ள முடியும் என இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடும் நிலை ஏற்பட்டாலும் விற்பதற்குப் பதிலாக அரச தனியார் ஒத்துழைப்புடன் கூட்டு வியாபாரமாக முன்னெடுப்பது அவசியம் என்றும் அதனால் செயற்குழுவின் சிபாரிசிற்காக, நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சுகளுக்கும் ஜனாதிபதிக்கும் முன்வைக்கப்பட்டுள்ளதாக செயற்குழுத் தலைவர் தெரிவித்தார்.
அவ்வாறே சுற்றுலாக் கைத்தொழிலைத் தொடர்வதற்கு பதிலாக நாட்டின் கைத்தொழிலை முன்னேற்றி உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியம் செயற்குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
நாட்டின் தலா உள்நாட்டு உற்பத்தி துறையின் பங்களிப்பு 15% மாத்திரம் என்றும் அபிவிருத்தி அடைந்த நாடொன்றிற்கு இது 30% பெறுமதி என்றும் கைத்தொழில அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்கிரம, மதுர விதானகே மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.