தென் மாவட்ட பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ. 40 கட்டணம் செலுத்தி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் நான்கு மணி நேரம் விரும்பியபடி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கிளம்பாக்கத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணம் செய்யும் மக்கள் பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறவேண்டிய நிலை உள்ளது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ரூ. 80 கட்டணத்தில் […]