பிரபலமான திரைப்படங்களை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பிரதான தேர்வாக Netflix, Amazon Prime Video, Jio Cinema மற்றும் Disney+ Hotstar ஆகிய ஓடிடி தளங்கள் இருக்கின்றன. இந்த ஓடிடிகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எல்லா தளங்களிலும் சிறப்பான படங்கள், வெப் சீரிஸ்கள் இருக்கின்றன. இதில் கூடுதலான அம்சம் என்னவென்றால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சில நிகழ்ச்சிகளை இலவசமாகவே பார்க்க முடியும். குறிப்பிட்ட நிகழ்ச்சி மற்றும் சினிமாக்களுக்கு சந்தாவும் தேவை.
இருப்பினும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா 499 ரூபாய் செலுத்தாமல், இலவசமாக கூட Disney+ Hotstar -ஐ பார்க்கலாம். ஹாட்ஸ்டாரின் சந்தா செலுத்தாமலேயே வெறும் 155 ரூபாய் வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தில் ரீச்சார்ஜ் செய்து ஓடிடியை பார்த்துவிடலாம். ஏர்டெல், ஜியோ நிறுவனங்களைவிட மிக குறைவான விலையில் ஹாட் ஸ்டார் சந்தாவை கொடுத்து வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் பார்க்கலாம்.
இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா
வோடபோன் ஐடியாவின் ரூ.155 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 8 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில், 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசம். இது ஒரு ஆட் ஆன் திட்டம் மட்டுமே.
ஏர்டெல் ரூ 839 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.839 ரீச்சார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் அன்லிமிடெட் அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். திட்டத்தில் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
ஜியோ ரூ 328 திட்டம்
ஜியோவின் ரூ.328 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர, திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற்றுக் கொள்ளலாம்.