Bengaluru restaurant blast: CCTV footage released | பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு: சிசிடிவி காட்சி வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே யில் குண்டு வெடித்த சிசிடிவி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‛‛ராமேஸ்வரம் கபே” என்ற உணவகம் உள்ளது. இன்று திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடித்தது குண்டு தான் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி. காட்சி பதிவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். குண்டு வைத்த நபர் குறித்து கர்நாடகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.