இனிமேல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற வாகனம் சம்பந்தமான வஸ்துக்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திலோ, டிரைவிங் ஸ்கூலிலோ வாங்கிக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும், நேரடியாக ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கே வந்துவிடும் என்கிற புதிய சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது தமிழகப் போக்குவரத்துத் துறை.
பாஸ்போர்ட் சம்பந்தமான டாக்குமென்ட்ஸுக்கு இப்படித்தான் ஒரு ப்ராசஸைக் கடைப்பிடித்து வருகிறது மத்திய அரசு. நம் வீட்டுக்கே காவலர்கள் நேரடியாக வந்து நம்மிடம் கையொப்பம் வாங்கிவிட்டுத்தான் பாஸ்போர்ட்டைத் தருவார்கள். அதேபோல், டிரைவிங் சம்பந்தமான விஷயங்கள் இனி ஸ்பீடு போஸ்ட் மூலம்தான் வருமாம்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால், ஆன்லைன் மூலமாக அரசாங்கத்தின் Vahan அல்லது Sarathy போர்ட்டல் மூலமாகவே அப்ளை செய்து கொள்ளலாம். உங்கள் அப்ளிகேஷனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, உங்கள் கன்ட்ரோலில் வரும் ஆர்டிஓ அலுவலகத்தில் டிரைவிங் டெஸ்ட் நடக்கும். நீங்கள் பாஸ் ஆகும் பட்சத்தில், ஸ்மார்ட் கார்டு வடிவில் உங்கள் டிரைவிங் லைசென்ஸ் அடுத்த நாளிலேயே ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கே வந்துவிடுமாம்.
இதன்மூலம் டிரைவிங் ஸ்கூல் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தில் திரியும் இடைத்தரகர்கள் மூலம் பெருகும் லஞ்சம் போன்றவற்றைக் குறைக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது அரசு. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சிஸ்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
மாநிலப் போக்குவரத்து கமிஷனர் சண்முக சுந்தரம், எல்லா RTO அலுவலகங்களுக்கும், அப்ளிகன்ட்களின் விவரங்களைச் சேகரிக்கும்படி கட்டளை இட்டிருக்கிறார்கள். அதனால் அப்ளை செய்தவர்களின் மொபைல் போன்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் டெலிவரி ஆவது தொடர்பான டெக்ஸ்ட் மெசேஜ்கள் வருமாம்.
டெலிவரி வரும்போது அப்ளிகன்ட்கள் இல்லாதபட்சத்தில், அந்த பேக்கேஜ் ஆர்டிஓ அலுவலகத்துக்கே ரிட்டர்ன் ஆகிவிடும் என்பதை கவனிக்க! ஸ்மார்ட் கார்டைத் திரும்பப் பெற, செல்ஃப் அட்ரெஸ் செய்யப்பட்ட என்வலப் கவரை ஸ்டாம்ப் ஒட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் சப்மிட் செய்தால்… மறுபடியும் அது ஸ்பீடு போஸ்ட் மூலம்தான் உங்கள் வீட்டுக்கு ரீபோஸ்ட் ஆகும். இதன்படி மாதத்துக்கு 5 லட்சம் போஸ்ட்கள் டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கிறதாம் போக்குவரத்துக் காவல்துறை.
ஆர்டிஓ-வில் லஞ்சம் குறையுதான்னு பார்க்கலாம்!