ரபா : மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் தீவிரமாகியுள்ளது.
முதலில் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று, மேற்கு காசா நகரில் உணவு கொண்டு வந்த லாரிகளை சுற்றி பாலஸ்தீனியர்கள் திரண்டனர். உணவை பெற தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே விழுந்ததில் பலர் காயம் அடைந்தனர்.அப்போது, ‘ட்ரோன்’கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாகவும் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசினர்.இதில், 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; 280 பேர் காயம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement