வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் ‘பே-டிஎம் பேமெண்ட்ஸ்’ வங்கிக்கு
ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கி விதிமுறைகளை மீறியதற்காக பே-டிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மார்ச்-15-ஆம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளா்களிடமிருந்து டெபாசிட் தொகை பெறக்கூடாது, கணக்குகளில் புதிய வரவு வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவை ரிசா்வ் வங்கி கடந்த ஜன.31 பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் பே-டிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் பகுதிநேர தலைவராக செயல்பட்டு வந்த விஜய் சேகர் ஷர்மா பதவி விலகினார்.
இதையடுத்து பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் நிதி புலனாய்வு பிரிவு அமைப்பு விசாரணை நடத்தியதில் பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு ரூ. 5 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement