வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: மோசடி புகாரில் புகையிலை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.
உ.பி.,யை மையமாக வைத்து, சிவம் மிஸ்ரா என்பவர் ‛பன்ஷிதர் புகையிலை நிறுவனம்’ நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு டில்லி, கான்பூர், மும்பை மற்றும் குஜராத் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் டில்லியில் உள்ள சிவம் மிஸ்ரா வீட்டில் ரூ.16 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயஸ் கார் மற்றும் மெக்லாரன், போர்ஸ்சே, லம்போர்கினி என சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். மேலும் ரூ.4.5 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement