ஷாஜஹான்பூர்,:உத்தர பிரதேசத்தில், ஊசி போட்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் போலி டாக்டர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூரில் வசித்தவர் அஸ்மா,32, என்ற பெண் நேற்று முன் தினம் இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டு அருகே இருந்த கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஸ்மாவுக்கு ஊசி வாயிலாக மருந்து செலுத்தினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அஸ்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து சற்று நேரத்தில் உயிரிழந்தார்.
டாக்டர் அவ்னீஷ், அவரது உதவியாளர் பிரியங்கா இருவரும் தப்பினர். அஸ்மாவின் குடும்பத்தினர் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடுகின்றனர். மேலும், அஸ்மா உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஷாஜஹான்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. கவுதம், ”இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க டாக்டர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கிளினிக்கிற்கு ‘சீல்’ வைப்பதுடன் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement