சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு இன்று விடை அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது நடைப்பயணத்தை முடித்து வைத்து அதையொட்டி நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வர உள்ள மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். இன்று அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்ற தகவலை யார் சொன்னார்கள் […]
