இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ. சந்தோஷ் ஜா அவர்களுக்கும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்; ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசியல், பொருளாதார, சமூகம் மற்றும் அபிவிருத்தி சார் விடயங்கள் பற்றியும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கிவரும் அபிவிருத்திசார் பங்களிப்புக்காகவும், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்காகவும், இதன்போது அமைச்சர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.